சென்னை: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் 3வது கட்ட சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, எடப்பாடி பழனிசாமியின் 3ம் கட்ட சுற்றுப்பயணம் ஆண்டு 11ந்தேதி தொடங்கி ( 11.8.2025 முதல் 23.8.2025) 23ந்தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K பழனிசாமி அவர்கள், ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு 11.8.2025 முதல் 23.8.2025 வரை மூன்றாம் கட்டமாக, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சட்டமன்றத் தொகுதி வாரியாக, புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம் தொடர் பிரச்சார் சூராவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி, 11.8.2025- கிருஷ்ணகிரி மேற்கு, 12.8.2025- கிருஷ்ணகிரி கிழக்கு, 13.8.2025- திருப்பத்தூர், 14.8.2025- திருப்பத்தூர், வேலூர் புறநகர், 15.8.2025- திருவண்ணாமலை மத்தியம், திருவண்ணாமலை வடக்கு, 16.8.2025- திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை கிழக்கு, 18.8.2025- திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை மத்தியம், வேலூர் புறநகர், 19.8.2025-, வேலூர் மாநகர், 20.8.2025-ராணிப்பேட்டை மேற்கு, ராணிப்பேட்டை மேற்கு, ராணிப்பேட்டை கிழக்கு, 21.8.2025- காஞ்சிபுரம், 22.8.2025- செங்கல்பட்டு மேற்கு, செங்கல்பட்டு கிழக்கு, 23.8.2025- சென்னை புறநகர், செங்கல்பட்டு கிழக்கு.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
