சென்னை, 
டல்நலக்குறைவு காரணமாக கவிஞர் இன்குலாப்  காலமானார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எனும் ஊரில் பிறந்தவர் கவிஞர் இன்குலாப். இவரது இயற்பெயர் எஸ்.கே.எஸ் ஷாகுல் ஹமீது. மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை படிப்பு முடித்த இன்குலாப்,
சென்னை புதுக்கல்லூரியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
ஒடுக்கப்பட்ட, தலித் மக்களின் போராட்டங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த குரல் இன்று அமைதியானது. கவிஞர் இன்குலாப் உடல் நலக்குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.
தனது மத அடையாளங்களை துறந்து மக்களுக்கான போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டவர் இன்குலாப்.

இன்குலாப்
இன்குலாப்

 
சென்னையில் இந்தி எதிர்ப்பு போராட்டம்  தொடங்கிய காலத்தில்  உடன் பயின்ற மாணவர்களான கவிஞர் நா. காமராசன் கா. காளி முத்து பா. செயப்பிரகாசம் ஆகியோருடன் இன்குலாப் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முனைப்புடன் கலந்து கொண்டார்.
இத்துடன் பல்வேறு கவிதை தொகுப்புகளையும் இன்குலாப் இயற்றினார். திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆதரவாளராக இருந்தாலும் பிற்காலத்தில் மார்க்சிய கொள்கைகளில் அதிக ஆர்வம் செலுத்தினார்.
சமூக ஒடுக்குமுறை, போராட்டங்கள் இவற்றை மையப்படுத்தி இன்குலாப் படைப்புகள் அமைந்தன.
‘மனுசங்கடா, நாங்க மனுசங்கடா’ உள்ளிட்ட இவரின் பல்வேறு படைப்புகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மக்கள் பாவலர்’ என அன்போடு அழைக்கப்படுபவர் கவிஞர் இன்குலாப்.
சிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். இவருடைய ‘நாங்க மனுஷங்கடா’, கண்மணி ராஜம், மீட்சி, சூரியனை சுமப்பவர்கள் போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதவை.
இன்குலாப் என்றால் புரட்சி என பொருள்படும்.
இன்குலாப்.  தனது உடலை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு ஆராய்ச்சி செய்ய தானமாக கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
ஒவ்வோரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்
பறவையோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்னையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளீப்பேன்.
                                                                            – இன்குலாப்