சென்னை:
க்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைகிறார்.

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைய உள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தை தொடங்குவதற்கு முன்னரே கமல்ஹாசனுடன் இணைந்து அருணாச்சலம் பணியாற்றி வந்தார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியது முதலே அக்கட்சியில் பொறுப்பு வகித்து வந்தார்.

பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.