மெர்சல் படத்தை எதிர்த்து பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக ஹெச். ராஜா, மெர்சல் படம் பற்றியும், அப்படத்தின் ஹீரோ விஜய் பற்றியும் ஏதாவது பரபரப்பாக பேசி வருகிறார்.

இதனால், “மெர்சல் பட தயாரிப்பாளர் செய்த புரமோஷனை விட பாஜக.,வினர், மெர்சலுக்கு எதிராக கூறிய கருத்துக்களால் உலகம் முழுவதும் மிகவும் பேமஸ் ஆகிவிட்டது” என்று பலரும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் பலூன் பட இயக்குனர் சினிஷ், “ஹெச் ராஜா சார்… பலூன்னு ஒரு படம் பண்ணி வச்சுருக்கேன். புரமோஷனுக்கு காசு இல்லை. கொஞ்சம் பாத்து எதாச்சும் பண்ணுங்க சார்.”.” என டுவீட் செய்துள்ளார்.

இந்த டுவிட்டுக்கு பின்னூட்டமிட்ட பலரும், அதெல்லாம் ஹெச் ராஜா பாத்துக்குவார் என்று கிண்டலாக கூறியிருக்கிறார்கள்.
[youtube-feed feed=1]