லண்டன்: பிரிட்டன் விவாகரத்து சட்டத்தில், கடந்த 50 ஆண்டுகளில், தற்போது முதன்முறையாக பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், தம்பதிகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,

தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள நடப்பு விவாகரத்து அல்லது மணமுறிவு சட்டங்களின்படி, விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் ஒருவர், தன்னுடைய இணையின் மீது, கள்ளத்தொடர்பு, காரணமற்ற குணநல மாற்றம் அல்லது கைவிட்ட நிலை ஆகியவற்றுள் ஒன்றை நிரூபிக்க வேண்டும்.

மேலும், தன்னுடைய இணையின் விருப்பமின்றி விவாகரத்துப் பெறவேண்டுமெனில், 5 ஆண்டுகளுக்கு இருவரும் பிரிந்து வாழ வேண்டும் என்பதே விதியாக இருந்தது.

ஆனால், தற்போதைய புதிய நடைமுறையின்படி, இணையினுடைய நடத்தைக் குறைபாடுகளை நிரூபிக்கவோ அல்லது 5 ஆண்டுகள் வரை பிரிந்து வாழவே தேவையில்லை.

பதிலாக, யார் விவாகரத்தை விரும்புகிறாரோ, அவர், “சரிசெய்யப்பட முடியாத பிரிவு அறிக்கை” ஒன்றை தாக்கல் செய்தால் போதுமானது.

– மதுரை மாயாண்டி