தனுசு எ(Sagittarius A) கருந்துளையின் முதல் அசல் நிழற்படம் : விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பு

Must read

னுசு எ* (Sagittarius A) என்பது பால் வழி விண்மீன் அண்டத்தின்  (galaxy) மையத்தினருகே மிக நெருக்கமாக அமைந்திருக்கும் ஒரு கருந்துளை ஆகும்.

Sagittarius A கருந்துளை வெடிப்பின் முதல் நிழற்படத்தைக் காண விஞ்ஞானிகள் மிக ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்தப் நிழற்படத்திற்காகவே  அறிவியல் ஆய்வாளர்களும்வ விஞ்ஞானிகளும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியென்ன படம் என்கிறீர்களா?

இதுவரை வந்துள்ள கருந்துளை வெடிப்பு குறித்த படங்கள் எல்லாமே நாசாவிலோ அல்லது வேறு அறிவியல் அமைப்புகள் வரைந்துகொடுத்தவையாகவே இருக்கும். ஆனால் இன்று வானியல் தொலைநோக்கிகள் கொடுக்கும் தரவுகளைக்கொண்டு ஒரு முழு அதிவேக கணினி தானாகவே அசல் படங்களை உருவாக்கும். இந்த படத்திற்காகத்தான் விஞ்ஞானிகள் ஆவலாக காத்துக்கொண்டுள்ளனர்

இதற்கு மிக முக்கியாக உதவுவது ஈவன்ட் ஹாரிசான் டெலஸ்கோப்பு  (EHT) எனும் வானியல் தொலைநோக்கிதான்

இந்த  ஈவன்ட் ஹாரிசான் டெலஸ்கோப்பு  (EHT) தொலைநோக்கியானது ரேடியோ தொலைநோக்கி

உலகம் முழுதும் உள்ள ரேடியோ தொலைநோக்கிளை ஒருங்கிணைத்து செயல்பட்டு  மிக நீளமான  Baseline Interferometer ஐ உருவாக்குகின்றன. இவற்றின் அளவு ஏறக்குறைய புவியின் அளவில் இருக்கும்

இதுபோன்ற பணிகளுக்கு மிகப்பெரிய கண்காணிப்பகம் மிக அவசியமான தேவையாகிறது. ஏனெனில் இந்த கருந்துளை நம்முடைய சுரியனை விட 40 லட்சம் மடங்கு பெரியது, அதோடு 26000 ஒளி ஆண்டு துரத்தில் இருக்கிறது.

சிலி, ஹவாய், அரிசோனா, மெக்சிபோ, ஸ்பெயின் மற்றும் தென் போலே ஆகிய இடங்களில் உளள  ஈவன்ட் ஹாரிசான் டெலஸ்கோப்பு  (EHT) தொலைநோக்கிய தகவல் மையங்களில் கிடைக்கும் தகவல்களை அப்படியே  supercomputer மாற்றப்பட்டுவருகின்றன. இந்த சுப்பர் கம்ப்யுட்டர் வெளியிடும் முதல் நிழற்ப்படம் விண்வெளி உலகில்  புதிய வெளிச்சமாக இருக்கும்.

– செல்வமுரளி

More articles

Latest article