சென்னை:

ராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை  இருந்து வேளச்சேரி  செல்லும் மின்சார ரயில் வண்டி சேவைகள் நிறுத்தப்படும் என்று ரயில்வே அறிவித்து உள்ளது.

காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட இருப்பதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்படுகிறது. அதன் படி கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் ரயில்களின் சேவை காலை 8 மணி முதல் பிற்பகல் 1.40 மணி வரை நிறுத்தப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் பராமரிப்புக்குப் பின்னரான முதல் ரயில் சேவை பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

அதே போன்று மறு மாா்க்கத்தில் காலை 8.10 மணி முதல் பிற்பகல் 1.50 மணி வரையிலும் மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. இந்த வழித்தடத்தில் பராமரிப்புக்குப் பின்னரான முதல் ரயில் சேவை 2.10 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு வழித்தடத்திலும் மொத்தமாக 38 ரயில்களின் சேவைகள் நிறுத்தப்படுவதாக தொிவிக்கப்பட்டு உள்ளது.