செங்கல்பட்டு: பராமரிப்புப் பணி காரணமாக  கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்  மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அலகுகள் உள்ளன.  இகுள்ள முதல் அலகில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், முதல்  மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டது. 8 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

இதற்கிடையில் 2-வது அலகில் மட்டுமே  மின்உற்பத்தி நடந்து வந்தது. அந்த அலகில் 220 மெகாவாட் மின் உற்ப்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், 2-வது அலகிலும் அவ்வப்போது  தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு  வருகிறது. இதனால் அவ்வப்போது மின் உற்சாகத்தி நிறுத்தப்பட்டு வருவது வாடிக்கையாக இருக்கிறது.  ஏற்கனவே  பிப்ரவரி மாதம்   பராமரிப்பு  காரணமாக மின் உற்பத்தில் நிறுத்தப்பட்டு  1-ந்தேதி  மீண்டும்  மின் உற்பத்தி தொடங்கியது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் மின்உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 2வது அணுமின் நிலைய அலகிலுல் தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகளுக்காக  இன்று முதல் 75 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.