சென்னை:

ராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் சென்னை மற்றும் புறநகர் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆவடி-பட்டாபிராம் இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில் சேவைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 9.45, 11.30, மதியம் 12.10, 1.20 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் நோக்கியும், காலை 10 மற்றும் 11.45 மணிக்கு திருத்தணி நோக்கியும், காலை 10.30 மற்றும் பகல் 12 மணிக்கு கடம்பத்தூர் நோக்கியும், காலை 11.05 மற்றும் பகல் 12.50 நேரங்களில் அரக்கோணம் நோக்கியும், காலை 11.15, பகல் 12.20, 1 மணி ஆகிய நேரங்களில் பட்டாபிராம் நோக்கியும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள்,

கடற்கரையில் இருந்து காலை 10.05 மணிக்கு பட்டாபிராம் நோக்கியும், காலை 11.10 மணிக்கு ஆவடி நோக்கியும், பகல் 12.10 மணிக்கு திருத்தணி நோக்கியும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஆவடி, இந்து கல்லூரி, பட்டாபிராம் ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காது.

அதேபோல திருத்தணியில் இருந்து காலை 8.50 மணிக்கு கடற்கரை நோக்கியும், காலை 9.40 மணிக்கு மூர்மார்க்கெட் நோக்கியும், அரக்கோணத்தில் இருந்து காலை 11.20-க்கு ஆவடி நோக்கியும், பகல் 12 மணிக்கு மூர்மார்க்கெட் நோக்கியும், கடம்பத்தூரில் இருந்து பகல் 12.05 மணிக்கு கடற்கரை நோக்கியும்,

திருவள்ளூரில் இருந்து காலை 10.05, 10.50, 11.25, பகல் 12, 1.05 ஆகிய நேரங்களில் மூர்மார்க்கெட் நோக்கியும், காலை 11.05, பகல் 1.40 ஆகிய நேரங்களில் கடற்கரை நோக்கியும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து காலை 10.30, 11.25, பகல் 12.50, 1.40 ஆகிய நேரங்களில் மூர்மார்க்கெட் நோக்கியும், ஆவடியில் இருந்து பகல் 12.10 மணிக்கு கடற்கரை நோக்கியும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் பட்டாபிராம், இந்து கல்லூரி ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காது.

கடற்கரை-வேளச்சேரி இடையே இருமார்க்கத்திலும் காலை 11.20 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரையிலும் இன்றும், நாளையும் மின்சார ரெயில்கள் இயக்கப்படாது.

கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் இடையே 9.50, 10.50. 11.20 ஆகிய நேரங்களிலும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே பிற்பகல் 1.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் இடையே காலை 10 மற்றும் 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கும்மிடிப்பூண்டி வரையிலும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.30, 10.25, பகல் 12.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் மற்றும் கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

மீஞ்சூர்-மூர்மார்க்கெட் இடையே காலை 10.35, 11, 11.25 மற்றும் பகல் 1.05 ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.