சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள நிலையில், அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு ஐசிசி உலககோப்பை போட்டி நடைபெற்று வரும் நிலையில், சென்னையிலும் 5 போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, அக்டோபர் 8, 18, 23, 27 ஆகியதேதிகளிலும் அடுத்தடுத்து போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வெவ்வேறு அணிகள் மோதுகின்றன. இதையடுத்து ஸ்டேடியத்தில் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று அந்த மைதானத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டேடியத்தின் கேலரி பகுதியில், வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்த 52 வயது முருகன் என்ற ஊழியர் எதிர்பாராத விதமாக மேலேயிருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசாரி விசாரணை நடத்தி வருகின்றனர். வெல்டர் முருகன் சுமார் 14 அடி உயரத்தில் பணி செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததாகவும் கீழே விழுந்த ஒரு சில நொடிகளில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெல்டிங் மேற்பார்வையாளர் மகேந்திர பாபு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாளை போட்டிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், விரைந்து பணிகளை முடிக்கும் வகையில், பராமரிப்பு பணியின்போது, எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடு பலர் பணி செய்து வருவதாகவும், அதுபோலவே வெல்டர் பணி செய்த நிலையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறத. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.