சென்னை:
ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 3 நாட்கள் புறநகர் ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது.
பேடப்பரியா-ஒடூர் இடையே ரயில்வே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், சனிக்கிழமை (மே 26) முதல் வரும் திங்கள்கிழமை (மே 28) வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
இன்று (சனிக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ள ரெயில் சேவைகள்:
விஜயவாடா-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் பினாக்கினி எக்ஸ்பிரஸ் ரயில் ஒடூர் ரயில் நிலையத்தில் நின்று, 80 நிமிடம் தாமதமாக சென்ட்ரலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல்-விஜயவாடா இடையே இயக்கப்படும் பினாக்கினி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.
தனபூர்-பெங்களூரு செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் கூடூர் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் நின்று செல்லும். நெல்லூர்-சூலூர்பேட்டை பயணிகள் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.
சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட்டுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் நேரம் மாற்றப்பட்டு, ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்படும்.
மூர் மார்க்கெட் -ஆவடிக்கு பகல் 2.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல ஆவடி-மூர்மார்க்கெட்டுக்கு பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 27) செய்யப்படும் மாற்றம்:
விஜயவாடா-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் பினாக்கினி எக்ஸ்பிரஸ் ஒடூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அந்த ரயில் 80 நிமிடம் தாமதமாக சென்ட்ரலை வந்தடையும்.
சென்னை சென்ட்ரல்-விஜயவாடாவுக்கு இயக்கப்படும் பினாக்கினி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.
தனபூர்-பெங்களூருக்கு செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் கூடூர் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் நின்று செல்லும்.
நெல்லூர்-சூலூர்பேட்டைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்படும். சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட்டுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.
மூர் மார்க்கெட்-ஆவடிக்கு பகல் 2.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ஆவடி-மூர்மார்க்கெட்டுக்கு பிற்பகல் 2.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.‘
திங்கள்கிழமை ரயில் சேவையில் செய்யப்படும் (மே 28) மாற்றம்:
விஜயவாடா-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் பினாக்கினி எக்ஸ்பிரஸ் ஒடூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அந்த ரயில், 80 நிமிடம் தாமதமாக சென்ட்ரலை வந்தடையும்.
சென்னை சென்ட்ரல்-விஜயவாடாவுக்கு இயக்கப்படும் பினாக்கினி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.
தனபூர்-பெங்களூரு செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் கூடூர் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் நின்று செல்லும்.
நெல்லூர்-சூலூர்பேட்டைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் 80 நிமிடம் தாமதமாகப் புறப்படும்.
சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட்டுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் 80 நிமிடம் தாமதமாகப் புறப்படும்.
மூர் மார்க்கெட்-ஆவடிக்கு பகல் 2.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ஆவடி-மூர்மார்க்கெட்டுக்கு பிற்பகல் 2.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் முழுமையாக ரத்து.
இவ்வாறு தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.