ஜெய்ப்பூர்:
சென்னை குளத்தூரில் நகைக்கடையில் கொள்ளை நடந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர்.
அங்கு கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் குண்டு பாய்ந்து இறந்தார்.
மேலும் இரு போலீசார் காயமடைந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் போலீசார் ராஜஸ்தான் விரைந்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இதில் முக்கிய குற்றவாளியான தினேஷ் சவுத்ரியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.