சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுஉள்ளது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய அதிகாரிகள், அது வெறும் புரளி என்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இந்தியா முழுவதுமே அண்மையில் வெடிகுண்டு மிரட்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன தமிழ்நாட்டிலும் அவ்வப்போது வெடிகுண்டுமிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில், சமீப நாட்களாக தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீடு உள்பட பல இடங்களுக்கு மிரட்டல்கள் வந்துள்ளன.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் அங்கு சென்ற போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், அது புரளிதான் என தெரிய வந்தது. மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து ராயப்பேட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.