அரபிக் கடலில் உருவான டவ்-தே புயலால் கடந்த 17ஆம் தேதி அன்று, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது.
புயல் கரையைக் கடந்தபோது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடுமையான மழை பெய்தது. இதனால் பல இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ‘மைதான்’ படத்துக்காக மும்பை புறநகர் பகுதிகளில் போடப்பட்டிருந்த பிரம்மாண்ட அரங்குகள் பலத்த சேதமடைந்தன.
இந்நிலையில் கடும் காற்றுடன் மழை பெய்ததில் ‘மைதான்’ படத்துக்காக மும்பை புறநகர் பகுதிகளில் போடப்பட்டிருந்த பிரம்மாண்ட அரங்குகள் பலத்த சேதமடைந்தன.
அமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மைதான்’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.