டெல்லி: கேள்வி கேட்க பணம் பெற்ற விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவியை பறிக்க மக்களவை நெறிமுறைக்குழு பரிந்துரைசெய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக தொடர்பாக குற்றச்சாட்டுக்கு ஆளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவியை பறிக்க மக்களவை நெறிமுறைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசுபவர் மம்தா கட்சியை சேர்ந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா. இவர் பிரதமர் மோடி மற்றும் மத்தியஅரசு மற்றும் தொழிலதிபர் அதானி குறித்து ஆவேசமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். ஆனால், இவர் பணத்துக்காக இவ்வாறு பேசியது தெரிய வந்துள்ளது. அதாவது, மஹுவா மொய்த்ரா எம்.பி. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி என்பவரிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே அளித்த புகாரின் பேரில் மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது. தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு மக்களவை நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ரவுக்கு சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து அவர் கடந்த 5 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரான நிலையில், பாதியிலேயே வெளியேறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், என்னைக் குறிவைத்து சதி நடக்கிறது. எனக்கு எதிரான சதியை நான் தவிடுபொடி ஆக்குவேன். என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றவும், சஸ்பெண்ட் செய்யவும் விரும்புகிறார்கள். அவர்களால் எனது தலைமுடியைக் கூட தொட முடியாது” என்று கூறினார். அவரது மமதை பேச்சு மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மக்களவை நெறிமுறைக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவியை பறிக்க நாடாளுமன்றத்திற்கு அக்குழு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது.
மேலும் மக்களவை நெறிமுறைக்குழுவின் தலைவரிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பிஎஸ்பி எம்பி தனிஷ் அலி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
#நாடாளுமன்றத்தில்_கேள்விஎழுப்ப_மஹுவா_மொய்த்ரா_எம்பி_லஞ்சம்! கே. எஸ். இராதா கிருஷ்ணன்
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபரிடம் விலைபோன மம்தா கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா!