மஹிந்திரா குழுமத்தின் தலைவர் கேஷுப் மஹிந்திரா இன்று காலை காலமானார் அவருக்கு வயது 99.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் அவரது உறவினர்களுடன் மும்பையில் வாழ்ந்துவந்த கேஷுப் மஹிந்திரா வயது மூப்பு காரணமாக காலமானார்.

கேஷுப் மஹிந்திரா யூனியன் கார்பைட் ஆலையின் தலைவராக இருந்தபோது உலக தொழில் துறை வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவு என்று கூறப்பட்ட 1984 ம் ஆண்டு நிகழ்ந்த போபால் விஷ வாயு கசிவு ஏற்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கேஷுப் மஹிந்திரா-வுக்கு 2010 ம் ஆண்டு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது இதிலிருந்து ஜாமீனில் வெளிவந்த அவர் மும்பையில் வசித்துவந்தார்.

1923 ம் அக்டோபர் 9 ம் தேதி சிம்லா-வில் பிறந்த கேஷுப் மஹிந்திரா, அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உயர்கல்வி பயின்றார்.

1947 ம் ஆண்டு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தில் இணைந்த அவர் 1963 ம் ஆண்டு அதன் தலைவர் பதிவுக்கு உயர்ந்தார்.

2004 முதல் 2010 வரை மத்திய அரசின் பல்வேறு தொழில்துறை கமிட்டிகளில் உயர்மட்ட உறுப்பினராக இருந்த இவரது மறைவு தொழில்துறையில் மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.