மஹிந்த வெற்றிபெற்றிருந்தால் என்னை கொன்றிருப்பார்! சந்திரிகா 'திடுக்' தகவல்!

Must read

ஶ்ரீலங்கா,
டந்த தேர்தலில் மஹிந்த  ராஜபக்‌ஷே மீண்டும் வெற்றி பெற்றிருந்தால் என்னை கொன்றிருப்பார் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவருமான சந்திரிகா குமார துங்கா,  நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

சந்திரிகா குமாரதுங்கா
சந்திரிகா குமாரதுங்கா

கடந்த கால ராஜபக்‌ஷே ஆட்சி நாட்டு மக்களுக்கு  வெறுப்பை மட்டுமே  ஏற்படுத்தி இருந்தது. அவர் நாட்டை சூறையாடிக் கொண்டு, குடும்ப ஆட்சியை நடத்தி வந்தார்.  மஹிந்த ராஜபக்சே ஆட்சியை மக்கள் வெறுத்ததற்கு இதுவே காரணம் என்று கூறினார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னுடன் பேசுவதற்கு பயந்தனர். ஒருவேளை என்னிடம் பேசுவதை  எவராவது கதைத்தால், அடுத்த நாள் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
எனது தொலைபேசி அழைப்புக்கள்  ரகசியமாக பதிவு செய்யப்பட்டன என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், அன்றைய ஆட்சிக் காலத்தில்  முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. பேருவளையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. அதேபோன்று கிறிஸ்தவ தேவாலயங்களும் தாக்கப்பட்டன.
தமிழ் மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டது. ராஜபக்சே ஆட்சி காலத்தில் தமிழர்கள் அனைவரையும் புலிகள் என்ன கண்ணோட்டத்திலேயே பார்த்தார்.
ராஜபக்சேவுக்கு இருந்தது மக்களின் பலம் அல்ல. பொலீஸ் மற்றும்  படையினரின் பலம் மட்டுமே. படையினரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பலம்.  மற்றையது மோசடியாக சம்பாதித்த பண பலமாகும்.
ராஜபக்ஷே - சந்திரிகா
ராஜபக்ஷே – சந்திரிகா

ஆயினும் அவரை தோற்கடிப்பதற்கு நாங்கள் மக்கள் பலத்தை ஒன்று திரட்டினோம். நாட்டை காப்பாற்று வதற்காகவே நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்று சேர்ந்தோம்.
மஹிந்த ராஜபக்சே  நடைபெற்று முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், என்னைத்தான் முதலில் கொலை செய்திருப்பார் என்று பேசினார்.
மேலும், இன்று நாட்டு மக்களுக்கு  சுதந்ரதிம், மனித உரிமைகள் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன.  நாங்கள் மக்களுக்கு ஜனநாயக்தையும் சுதந்திரத்தையும்  வழங்கியுள்ளோம். ஊடக சுதந்திரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.

More articles

Latest article