மதிய செய்திகள்!

Must read

afternoon-news-top
🔴🔵ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தமிழக உணவுத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
🔴🔵இன்று முதல் 3 நாட்களுக்கு தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 21,289 பேருந்துகள் (சென்னையிலிருந்து மட்டும் 21,225) இயங்குகின்றன. சென்னையில் 5 இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
🔴🔵மலேசியா ஜோஹர் பஹ்ருவில் உள்ள சுல்தான் ஷா பல் நோக்கு மருத்துவமனையில் பயங்கரத் தீ விபத்து. இதில் 3 இந்தியர்கள் உள்பட 6 பேர் உடல் கருகி பலி. பலியான இந்தியர்களில் 2 பேர் பெண்கள் ஆவர்
🔴🔵திருவண்ணாமலையில், முன்னாள் அமைச்சர் நடத்திய பால்குட ஊர்வலத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான சம்பவத்தில், திருவண்ணாமலை டவுன் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார
🔴🔵விழுப்புரம் மாவட்டம் வடகரை தாழனூர் நாட்டாமை சண்முகம். கிராம நிர்வாக அலுவலகம் அருகே அவர் ஒரு 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். சிறுமி போட்ட அலறலில், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை மீட்டு, சண்முகத்தை அடித்து உதைத்தனர். பின்னர் அவரை போலீசார் வந்து கைது செய்தனர்
🔴🔵கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் தீவிரவாத ஒத்திகை நடைபெறுகிறது. சஜாக் ஆபரேஷன் என்ற இந்த ஒத்திகை, கன்னியாகுமரி முதல் நீரோடி வரை 68 கி.மீ. தூரத்தில் நடக்கிறது. இன்று மாலை 6 மணி வரை அங்கு சஜாக் ஆபரேஷன் நடைபெறும்
🔴🔵தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகளை துவக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளது.
🔴🔵கேரள மாநில எல்லை பகுதியில், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ள நிலையில், எட்டு மாவட்ட எஸ்.பி.,க்கள் பங்கேற்ற கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி., பாரி தலைமை வகித்தார்.
🔴🔵திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக, வைகோ-திருமாவளவன் இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்
🔴🔵7000 பாம்புகளை பிடித்த பாம்பு பிடிப்பதில் வல்லவரான திருவாரூரை சேர்ந்த மோகன் என்பவர் நல்லபாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
🔴🔵திருவண்ணாமலை அருகே 18 நாளில் அடுத்தடுத்து 7 பேர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்தனர். இதனால், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
🔴🔵ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் தன்னை தீயணைப்புத்துறை அதிகாரி என்று கூறிக் கொண்டு தீபாவளி வசூல் வேட்டையில் இறங்கினார் ஒருவர். விசாரணையில், இப்படி நடித்து வசூலித்தவர் மதுரையைச் சேர்ந்த ராஜ்கணேஷ் எனத் தெரியவந்தது. அவரைக் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்
🔴🔵பொலிவுறு ரயில் நிலையத் திட்டத்தில் புதுச்சேரி இணைந்துள்ளது. இதனால், புதுச்சேரி ரயில் நிலையம் விரைவில் பொலிவு பெறவுள்ளது.
🔴🔵நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ளார்.அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகலமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனையடுத்து அவர் ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
🔴🔵சமாஜ்வாடி கட்சியில் இருந்து பவன் பாண்டே நீக்கப்பட்டுள்ளார்.அவர் கட்சியின் எம்.எல்.சி. ஷு மாலிக்கை அறைந்ததால் அவர் நீக்கப்பட்டதாக தகவல்.கடந்த சில தினங்களில் சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்ட சம்பவங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
🔴🔵தாணே கால் சென்டர் மோசடி தொடர்பாக 2 முக்கிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
🔴🔵சமஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்க முயற்சிக்கவில்லை.8 ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அந்த மாநில அரசு செய்து கொள்ளும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்.பெண் கல்வியை ஊக்குவிக்க துணை குழுக்கள் அமைக்கப்படும்-ஜவடேகர்
🔴🔵பாகிஸ்தானில் பிராந்திய உறுதிப்பாடு ஏற்பட வேண்டுமானால், அவர்கள் தங்கள் மண்ணில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
🔴🔵துபையில் தனது ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு ரூ.60 கோடி செலவில் ஒற்றை இலக்க பதிவெண்ணைப் பெற்றதால் செய்திகளில் இடம்பிடித்த இந்தியத் தொழிலதிபர், தவறான இடத்தில் அந்தக் காரை நிறுத்தியதாக எழுந்தப் புகாரால் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அவருக்கு துபை காவல் துறை ரூ.18,000 அபராதம் விதித்துள்ளது
🔴🔵மாசு வெளியீட்டு சோதனைகளை ஏமாற்றி மோசடி செய்ததை கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டது வோக்ஸ்வேகன் நிறுவனம். இது தொடர்பான வழக்கில், அது 15 பில்லியன் டாலர் தீர்வுத் தொகை தர வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு. அதன்படி, வோக்ஸ்வேகன் வாடிக்கையாளர்கள் தலா 10,000 அமெரிக்க டாலர்கள் வரை பெற முடியும்
🔴🔵அமெரிக்காவில் ஒரு மூதாட்டி கே.எப்.சி.யில் சிக்கன் வாங்கியுள்ளார்.அவர் வாங்கிய சிக்கன் பாக்கெட்டில் குறைவான துண்டுகள் இருந்துள்ளது.இதனால், மூதாட்டி கே.எப்.சி. தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி வழக்குத் தொடர்ந்துள்ளார்.அதில், அவருக்கு இழப்பீடாக ரூ.295 கோடி தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
🔴🔵17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 6 நகரங்களில் நடைபெறும் என பிபா தெரிவித்துள்ளது.
🔴🔵மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் ரஜினிகாந்த். பரிசோதனைகளை முடித்துக் கொண்டு அடுத்த வாரம் அவர் சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது. ரஜினியுடன் அவருடைய மகள் ஐஸ்வர்யா தனுஷும் அமெரிக்கா சென்றுள்ளார்
🔴🔵நடிகை ரம்பா விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால், தன்னை தன் கணவருடன் சேர்த்து வைக்கவே அவர் குடும்பநல நீதிமன்றத்தை அணுகியுள்ளார். சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், குடும்ப வாழ்க்கையைத் தற்போது புரிந்து கொண்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார் ரம்பா

More articles

Latest article