இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று தனது மனைவியுடன் கொழும்பில் உள்ள திரையரங்கு ஒன்றில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்துள்ளார்.
திரையரங்கில் அமர்ந்து ராஜபக்சே படம் பார்க்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அமரர் கல்கியின் நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கத்தில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் செப். 30 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
MR heads to the theatre!
Former President Mahinda Rajapaksa watched Mani Ratnam's latest blockbuster 'Ponniyin Selvan' this evening in a theater in Colombo. Some Tamil MPs also joined in to see the movie. #SriLanka #PonniyanSelvan1 pic.twitter.com/byclrRcGAv
— Jamila Husain (@Jamz5251) October 19, 2022
இலங்கையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஜராஜ சோழன் குறித்த வரலாற்று புதினமான இந்தப் படம் இலங்கையிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நாட்டை கடும் பொருளாதார நெருக்கடியில் தள்ளி மக்களை அல்லலுக்கு உள்ளாக்கிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் மக்களின் கடும் கோபத்தை தாங்க முடியாமல் பதவியைத் துறந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறினர்.
மகிந்த ராஜபக்சே இன்று இரவு கொழும்பிலுள்ள திரையரங்கொன்றில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தார்.
இவருக்கு பொன்னியின் செல்வன் பற்றிய மாண்பு தெரியுமா? மகிழ்ச்சியா?தமிழனின் வீர காவியத்தை பார்த்துள்ளார். pic.twitter.com/p8QoMSgpny— K.S.Radhakrishnan (@KSRadhakrish) October 19, 2022
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நாடு திரும்பிய மகிந்த ராஜபக்சே இதுகுறித்த எந்த கவலையும் இன்றி திரையரங்கிற்கு வந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்தது சமூக வலைதளத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.