கொழும்பு:

லங்கை பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் அதிபர் ராஜபக்சே, இன்று பிரதமராக பதவி ஏற்றார். அவருக்கு புதிய அதிபரும், அவரது சகோதரருமான  கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து, அங்கு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, கோத்தபய ராஜபக்சேயை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய  தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து வந்த பிரதமர் ரணிலை,  பிரதமர் பதவியில் விலக கட்சியில்  நெருக்கடி கொடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, ரணில் தனது  பதவியை  ராஜினாமா செய்தார்.

அதைத்தொடர்ந்து, அதிபர் கோத்தபய, தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள தனது அண்ணன் ராஜபக்சேயை புதிய பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் முறைப்படி பதவி விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராக ராஜபக்சே இன்று பதவியேற்றார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மகிந்த ராஜபக்சே பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.