நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34.
ஆதாரங்களின்படி, சுஷாந்த் சிங் ராஜ்புத் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இவரின் மறைவால் பாலிவுட் திரையுலகினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர் .
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் இவர் டோனியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பாலிவுட்டில் Kai Po Che என்ற படம் மூலம் அறிமுகமானார். கடைசியாக சிச்சோர் படத்தில் நடித்தார். M.S. Dhoni: The Untold Story படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இவரது “Dil Bechara” என்ற படம் மே 8ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
The heartbreaking end of a dreamer: the 50 dreams of #SushantSinghRajput pic.twitter.com/VPgR8Tr0qJ
— Mahim Pratap Singh (@mayhempsingh) June 14, 2020
இந்நிலையில் பத்திரிகையாளர் மஹிம் பிரதாப் சிங்க் சுஷாந்தின் ஐம்பது கனவுகளை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .ஒரு கனவு காண்பவனின் கனவுகள் நொறுக்கப்பட்டுள்ளது . சுஷாந்தின் கனவு இதழ்: பறக்க கற்றுக்கொள்ளுங்கள் … நீல துளைக்குள் நீராடுங்கள் … இறப்பதற்கு முன் அவர் உணர்ந்த கனவுகள் என பதிவிட்டுள்ளார் .
Sushant's dream journal: Learn to fly…dive into a blue hole…the dreams that he realised before moving on…💔 #SushantSinghRajput pic.twitter.com/a1MHc8KqWe
— Mahim Pratap Singh (@mayhempsingh) June 14, 2020