தெலுங்கில் மகேஷ்பாபுவும், பவன் கல்யாணும் இளம் நாயகன்களாக உள்ளனர். இருவருக்கும் தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உண்டு.

பவன் கல்யாண் இப்போது ‘அய்யப்பனும், கோஷியும்’ மலையாளப்படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து வருகிறார்.

இதனை முடித்து விட்டு, கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இதில், நிதி அகர்வால் ஜோடியாக நடிக்கிறார்.

இந்த படத்தை அடுத்த ஆண்டு சங்கராந்தியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார், பவன்.

மகேஷ்பாபு, இப்போது பெரும் பொருட் செலவில் உருவாகும் ‘சர்காரு வாரி படா’ என்ற படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடி- கீர்த்தி சுரேஷ்.

துபாயில் இந்த படத்தின் சண்டைக்காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டன. பரசுராம் டைரக்டு செய்கிறார்.

இந்த படத்தையும் அடுத்த ஆண்டு சங்கராந்தியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

– பா. பாரதி

[youtube-feed feed=1]