நெட்டிசன்:

ஜீவசுந்தரி முகநூல் பதிவு…

இன்று காந்தியின் 70  நினைவுதினம், தியாகிகள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. எஸ்தர் என்ற சகோதரிக்கு காந்தி எழுதிய கடிதம்…

”நான் எந்தக் காரணத்துக்காகவும் யாரையும் கொல்ல மாட்டேன். ஒருவன் மனந்துணிந்து என்னைக் கொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், சாவதற்குத் தயாராக இருப்பேன்.

ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட ஆலோசனையையே நான் கூறுவேன். ஆனால், யாருக்காவது போதுமான அளவு மனத்துணிவு இல்லையென்று நான் கண்டால், இருக்கும் அளவு மனத்துணிவுடன் போரிடுமாறே நான் ஆலோசனை கூறுவேன்.

மனத்துணிவு இல்லையேல் அன்பும் இல்லை. இந்தியாவில் அன்பு இல்லை என்பது மட்டுமல்ல; ஆண்மை குறைந்ததனால் வெறுப்புணர்ச்சிதான் இருக்கிறது.

போரிட வேண்டும், கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது; அத்துடன் சக்தியற்ற, முற்றிலும் நிராதரவான நிலையும் இருக்கிறது.

– பாபு 3.9.1917 , நாடியாட் –

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ’சகோதரிகளுக்கு எழுதிய கடிதங்கள்’ என்ற நூலிலிருந்து……  இக்கடிதம் எஸ்தர் என்னும் சகோதரிக்கு எழுதப்பட்டது.