இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில், முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும், புதிய திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகனாக அறிமுகமாகிறார் மஹத்.

இப்படத்தில் நடிகர் ஜாஹிர் இக்பாலுடன் இணைந்து மற்றொரு நாயகனாக நடிக்கின்றார். பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

லண்டனில் 30 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டு, தற்போது டெல்லியில் தனது கதாபாத்திரத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்குகொண்டுள்ளார் மஹத் ராகவேந்திரா.