மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்பு 164ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 100 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக வரலாறு காணாத அளவு மழை பொழிந்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளக்காடாக மிதந்த நிலையில், பல பகுதிகளிலும் நிலச்சரிவும் ஏற்பட்டது. மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக மாநிலத்தின் 21 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ராய்காட், சதாரா, ரத்னகிரி, தானே, கோலாப்பூர், சிந்துதுர்க் உள்பட 6 மாவட்டங்களில் நிலச்சரிவுகள் அதிக அளவு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.
ராய்காட் மாவட்டத்தில் மகத் என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 90 பேர் மண்ணில் புதைந்தனர் . அந்த பகுதியில் இதுவரை 53 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன . மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
சதாரா மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். ரத்னகிரியில் 21 பேர் பலியான நிலையில், தானேவில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,, கோலாப்பூரில் 7 பேர் நிலச்சரிவில்சிக்கி உயிரிழந்துள்ளனர் . கடந்த 5 நாட்களில் மட்டும் நிலச்சரிவுகளில் 164 பேர் உயிரிழந்துள்ளனர்/ மேலும் 100 பேரை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணியில் தேசிய , மாநில பேரிடர் மீட்புப் படை , போலீஸார் , தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் மழை தொடர்வதால், மீட்புப் பணிகளில் சிக்கல்கள் ஏற்பட்டு வருவதாகவும், இதுவரை 2.5 லட்சம் பேர் அபாயகரமனா பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார்.
