மும்பை: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சர் தேஷ்முக் தனது ராஜினாமாவை முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் உத்தவ்தாக்கரே தலைமையில் கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. மாநில அரசின் உள் துறை அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனில் தேஷ்முக் உள்ளார். இவர் மீது மும்பை காவல்அதிகாரியிடம், மாதம் ரூ.100 கோடி மாமுல் வசூலித்து தர வேண்டும் என்று கூறியதாக, மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்பீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், இதுகுறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார்.