மும்பை:

ட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் காலை 7 மணி தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்த இரு மாநிலங்களிலும் எதிர்பார்க்கப்பட்ட அளவில் வாக்குப்பதிவு நடைபெறாமல், மந்தமாகவே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்றைய தேர்தலில், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், முதல்வர், பாலிவுட் பிரபலங்கள், சச்சின் டெண்டுல்கர் உள்பட ஏராளமானோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில், கொட்டு மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

மாலை 4 மணி நிலவரப்படி அரியானாவில் 50.59% வாக்குகளும், மகாராஷ்டிராவில் 43.70% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில்  மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக-சிவசேனா கூட்டணிக்கும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் 3,237 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. மும்பையில் வாக்குப்பதிவு டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் காவல்துறையினர் மத்தியப் படையினர் என 3 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று 90 தொகுதிகளை கொண்டுள்ள ஹரியானா மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள், ஜனநாயக் ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியிருப்பதால், பலமுனை போட்டி உருவாகியிருக்கிறது. ஆயிரத்து 169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகரும், சமூக ஆர்வலருமான ஆமீர் கான், மும்பையில் மேற்கு பந்தராவில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், தனது வாக்கினை பதிவு செய்தார். இதுவரை இல்லாத அளவாக, அதிக எண்ணிக்கையில் வாக்குப்பதிவு சதவிகிதம் அமைந்திடும் வகையில் மகாராஷ்டிராவின் அனைத்து வாக்காளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்ற முன்வர வேண்டும் என ஆமீர் கான் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, தனது மனைவியும், நடிகையுமான லாரா தத்தாவுடன் வந்து, மும்பையின் மேற்கு பந்த்ராவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அவரது மனைவி காஞ்சன் நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் (Devendra Fadnavis), மனைவி அம்ருதா(Amruta), தாயார் சரிதா(Sarita) ஆகியோருடன் சென்று, நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், தனது வாக்கினை பதிவு செய்தார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்-கின் மகனும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக், மனைவியும், நடிகையுமான ஜெனிலியா டிசோசாவுடன் வந்து, லத்தூரில் உள்ள வாக்குச்சாவடியொன்றில் வாக்களித்தார்.

“ஏக் தோ தீன்” பாடல் புகழ் நடிகை மாதூரி தீட்சித், மும்பையில் மேற்கு பந்த்ராவில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், வாக்காளர்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கினை பதிவு செய்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பியுமான சுப்ரியா சுலே, புனே அருகில் உள்ள பாராமதி (Baramati) நகரில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேல், தனது மனைவி வர்சாவுடன் சென்று, கோண்டியா (Gondia) நகரில், வாக்களித்தார்.

மும்பையின் கிழக்கு பந்த்ரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, தனது மனைவி ராஷ்மி (Rashmi), மகன்கள் ஆதித்யா மற்றும் தேஜாசுடன் (Aditya & Tejas) வந்து, வாக்கினை பதிவு செய்தார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்யா தாக்ரே, ஒர்லி (Worli) சட்டப்பேரவைத் தொகுதியில், போட்டியிடுகிறார்.

மும்பை மேற்கு பந்த்ரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகன் அர்ஜூன் ஆகியோர் வாக்கினை பதிவு செய்தனர். பின்னர் பேசிய சச்சின் டெண்டுல்கர், வாக்காளர்கள் அனைவரும், தவறாது தங்கள் வாக்கினை பதிவு செய்ய முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மும்பை பெருநகரில் உள்ள வாக்குச்சாவடியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் பேசிய அவர், 93 வயதில், முன்னாள் ராணுவ வீரர் வாக்களிக்க வந்திருப்பது தன்னை மகிழ்வில் ஆழ்த்துவதாகவும், இவரே இன்றைய ஹீரோ என்றும் பாராட்டினார். பின்னர் அனைவருடனும் இணைந்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மும்பை மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமா மாலினி, தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதேபகுதியில், பாலிவுட் நடிகர் கோவிந்தா, தனது மனைவி சுனிதாவுடன் வந்து, வாக்கினை பதிவு செய்தார். பிரபல பாலிவுட் நடிகை பிரித்தீ ஜிந்தாவும், தனது வாக்கினை பதிவு செய்திருக்கிறார். அமெரிக்க தொழில் அதிபரை மணந்து, பெரும்பாலும் லாஸ்ஏஞ்சலீஸ் நகரிலேயே வசிக்கும் பிரீத்தி ஜிந்தா, தற்போது, மும்பை வந்து வாக்களித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனது மனைவி கெளரி கானுடன், மும்பையின் மேற்கு பந்த்ராவில் வாக்கினை பதிவு செய்தார். பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், மும்பை பெருநகரின், மேற்கு பந்தராவில் உள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்கினைப் பதிவு செய்தார். இதேபோன்று, மும்பையின் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், பாலிவுட் நடிகர்களான அனில் கபூரும், ஹிருத்திக் ரோஷனும் தங்கள் வாக்கினை செலுத்தினர். நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான ஷபானா ஆஸ்மி, தனது கணவரும், ஹிந்தி திரைப்பட பாடலாசிரியருமான ஜாவேத் அக்தருடன் சென்று வாக்களித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மாரத்வாடா மண்டலத்திற்குட்பட்ட லத்தூர்  மாவட்டத்தின் பல பகுதிகளில், கனமழை பதிவாகி வரும் நிலையில், வாக்குப்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொட்டும் மழைக்கிடையே குடைபிடித்தபடி வரும் வாக்காளர்கள், தங்களது வாக்கினை பதிவு செய்து செல்கின்றனர்.

90 தொகுதிகளை கொண்டுள்ள அரியானா மாநிலத்திலும், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள், ஜனநாயக் ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியிருப்பதால், பலமுனை போட்டி உருவாகியிருக்கிறது. ஆயிரத்து 169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அரியானா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில், புதிய வரவாக வந்திருக்கும் ஜனநாயக் ஜனதா கட்சி, இம்முறை வாக்குப்பதிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் செளதாலா மற்றும் அவரது குடும்பத்தினர், டிராக்டரில் மூலம் வந்து சிர்சாவில் உள்ள வாக்குச்சாவடியொன்றில் வாக்களித்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மாரத்வாடா (Marathwada) மண்டலத்திற்குட்பட்ட லத்தூர் (Latur) மாவட்டத்தின் பல பகுதிகளில், கனமழை பதிவாகி வரும் நிலையில், வாக்குப்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொட்டும் மழைக்கிடையே, குடைபிடித்தபடி வரும் வாக்காளர்கள், தங்களது வாக்கினை பதிவு செய்து செல்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நாக்பூர் மத்திய தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியொன்றில், தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், தங்களது அடிப்படை பிரச்சினைகளை புரிந்து, அதனை தீர்த்து வைக்கும், மக்கள் பிரநிதிகளை, வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்,(Manohar Lal Khattar) கர்நால்(Karnal) நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். சைக்கிளில் வந்த ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்..

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், ஏற்கனவே, தோற்றுவிட்ட காங்கிரஸ் கட்சி, ஒருபோதும் வெற்றிபெறாது என்றார்.