மும்பை: நாடு முழுவதும் இன்றுமுதல் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாய மில்லை என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மத்தியஅரசின் அறிவுறுத்தலின்படி மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுமுடக்கம் உள்பட ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் தொற்று பரவல் குறையத்தொடங்கியதும் படிப்படியாக  கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது கோரோனா தொற்று வெகுவாக குறைந்து கட்டுக்குள் உள்ளதால், அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் மார்ச் 31ந்தேதியுடன் முடிவுக்கு வருவதாகவும், ஆனால் இன்னும் ஓரிரு மாதங்கள் முக்கவசம் அணிவது சிறப்பு என்று பேரிடர் மேலாண்மை சட்டப்படி மத்தியஅரசு கடந்த வாரம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில அரசும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் மார்ச் 31ந்தேதியுடன் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்றுமுதல் எந்தவொரு கொரோனாக கட்டுப்பாடுகளும் கிடையாது.பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் வாபஸ் பெற்று மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருந்தாலும் பொதுமக்கள் முகமூடிகளை அணிய அறிவுறுத்துதப் (கட்டாயமில்லை) பட்டுள்ளதுடன், நிலைமையை  மாவட்ட நீதிபதிகள் நிலைமையை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.