மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் மும்பை – நாக்பூர் நெடுஞ்சாலையில் வனவிலங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

நாடெங்கும் வனங்களுக்கு இடையே போடப்படும் சாலைகளில் விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.  விலங்குகள் இந்த சாலைகளைக் கடக்கும் போது  ஏற்படும் விபத்துக்களால் பல விலங்குகள் உயிரிழக்கின்றன.   இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுக்கின்றன. 

அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை நாக்பூர் நெடுஞ்சாலையில் பல மனித விலங்குகள் சாலை விபத்தில் மரணம் அடைகின்றன.  இதற்காகப் பலவித நடவடிக்கைகள் எடுத்தும் வன விலங்குகள் நெடுஞ்சாலைகளைக் கடப்பதைத் தடுக்க முடிவதில்லை.  இதற்காக மகாராஷ்டிர மாநில அரசு ஒரு புதிய ஏற்பாட்டைச் செய்துள்ளது.

மகாராஷ்டிர அரசு மும்பை நாக்பூர் நெடுஞ்சாலையில் சாலைகள் சற்று கீழிறக்கப்பட்டு வனவிலங்குகள் சாலைகளுக்கு வர முடியாத படி தடை செய்தது.  விலங்குகள் சாலைகளைக் கடக்க வசதியாக அங்கு வனவிலங்குகள் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.  இதன் மூலம் விலங்குகள் சாலை விபத்தில் மரணம் அடைவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.