On the occasion of completing 1 Year Of Vaccine Drive, a postage stamp has been released jointly by ICMR and Bharat Biotech

புதுடெல்லி:
கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு நினைவு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. 156.76 கோடி தடுப்பூசிகள் இந்த ஓராண்டில் போடப்பட்டுள்ளன. ஒரு நாளில் சராசரியாக 66 லட்சம் தடுப்பூசிகள் இப்போது போடப்படுகின்றன.

இந்நிலையில், தடுப்பூசி இயக்கத்தின் 1 ஆண்டு நிறைவையொட்டி, ICMR மற்றும் பாரத் பயோடெக் இணைந்து ஒரு தபால் தலையை வெளியிட்டுள்ளது.