அரசு பணிகளுக்கு திரும்பும் அனைத்து ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 5வது கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், இன்று முதல் பல்வேறு மாநிலங்களில் அரசுப்பணிகள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் 50 சதவிகித பணியாளர்களைக் கொண்டு நிர்வாகப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா தாக்கத்தில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்திலும் இன்றுமுதல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கி வருகிறது. இதனால் பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது.
அதன்படி, பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்களுக்கு தினமும் உடல் வெப்பநிலை பரிசோதனையை கட்டாயமாக்கி யுள்ளது . அது மட்டுமல்லாமல், சமூக விலகலையும், கிருமி நாசினிகளைக் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தும் நடைமுறை, அனைத்து ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் உள்பட பல்வேறு வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.