பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான வினோத் தாவ்டே, நவம்பர் 19, செவ்வாய்கிழமை அன்று தானேவின் விராரில் உள்ள விவாண்டா ஹோட்டலில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ₹5 கோடி பணத்துடன் கையும் களவுமாக சிக்கினார்.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது.

நள சோப்ரா வேட்பாளர் ராஜன் நாயக்கிடம் பணத்தை தர வந்தபோது பகுஜன் விகாஸ் அகாடி (பி.வி.ஏ) மற்றும் நள சோப்ரா எம்.எல்.ஏ க்ஷிதிஜ் தாக்கூர் ஆகியோரின் கட்சித் தொண்டர்கள் தாவ்டேவை சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

தாவ்டேவிடம் இருந்து இரண்டு டைரிகள் மீட்கப்பட்டதாகவும், அதில் பணம் செலுத்திய விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் க்ஷிதிஜ் குற்றம் சாட்டினார்.

வினோத் தாவ்டே மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவாண்டா ஹோட்டலுக்கு போலீசார் சீல் வைத்த நிலையில், தேர்தல் ஆணையம் இது குறித்து இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.