காலாவில் பாடுகிறார் முதல்வர் மனைவி?

ஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தில் மகாராஷ்டிரா முதல்வர்  தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பாட இருப்பதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா முதல்வரின் மனைவி அம்ருதா பின்னணி பாடகி ஆவார். ஏற்கனபே பல படங்களில் அவர் பாடியுள்ளார். மேலும் அவருக்கு, மாடலிங், சினிமா போன்ற கலைத்துறையில்  ஆர்வம் கொண்டவர்.

பெண் சிசு கொலை தொடர்பாக இவர் பாடிய விழிப்புணர்வு பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து மும்பையில் நடைபெற்ற  காலா படப்பிடிப்பின்போது நடிகர் ரஜினிகாந்தை அம்ருதா சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திபின் காரணமாக அவர் காலா படத்தில்  பாடல் பாட இருப்பதாக கோலிவுட்  வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்களை அவர் டிவிட்டர் பக்கத்தில்வெளியிட்டிருந்தார்.  அதில், ரஜினியுடனான சந்திப்பினபோது  சில சமூக பிரச்சினைகள் குறித்து பேச வாய்ப்பு கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இந்த சந்திப்பின் போது இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.


English Summary
Maharashtra CM Devendra Padnavis wife Amrutha Singing in Rajni's 'Kalaa' movie