மும்பை,

காராஷ்டிராவில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவில் செயல்பட்டு வருகிறார்.

மகாஷ்டிராவில் விவசாயிகளுக்கு மாநில அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும், வறட்சி காரணமாக பயிர்க்கட்ன்களை தள்ளுபடி செய்ய மறுத்து வருவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா அரசின் இந்த செயல்பாடுக்கு, ஆளும் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி.யான நானா பட்டோலே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

விவசாயிகளுக்கு எதிரான  மாநில அரசின் செயல்பாட்டினை சுட்டிக்காட்டு தனது பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தனது ராஜிநாமா கடிதத்தை  லோக் சபாவின் சபாநாயகரிடம் இன்று கொடுத்துள்ளார்.

இவர், மகாராஷ்டிராவில் உள்ள  பண்டார கோண்டியா தொகுதியில்,  தேசியவாத காங்கிரசின் முன்னாள் அமைச்சர் பிரபுல் பட்டேலை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது/