மும்பை :
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொட்டு மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
காலை 9 மணி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 5 புள்ளி 7 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான பிரபுல் பட்டேல் உள்பட முக்கிய பிரமுகர்கள், நடிகர் நடிகைகள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே கட்டமாக, சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக-சிவசேனா ஒரு அணியாகவும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. இரு தரப்பினர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் 3,237 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தலையெட்டி மும்பை நகர் முழுவதும் சுமார் , 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை. மும்பையில் வாக்குப்பதிவு டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. . மகாராஷ்டிரா மாநிலத்தில், காவல்துறையினர், மத்தியப் படையினர் என 3 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மாரத்வாடா (Marathwada) மண்டலத்திற்குட்பட்ட லத்தூர் (Latur) மாவட்டத்தின் பல பகுதிகளில், கனமழை பதிவாகி வரும் நிலையில், வாக்குப்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொட்டும் மழைக்கிடையே, குடைபிடித்தபடி வரும் வாக்காளர்கள், தங்களது வாக்கினை பதிவு செய்து செல்கின்றனர்.
முன்னாள் மித்தியஅமைச்சர் பிரபுல்படேல் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். மும்பை லத்தூர் வாக்குச் சாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் அமித் தேஸ்முக், திரஜ் தேஸ்முக் தங்களது வாக்குளை செலுத்தினர்.
சினிமா நடிகை ஜெனிலியா தனது கணவர் ரிதேஷ் தேஸ்முக்குடன் வந்து வாக்கை செலுத்தினார்.
பிரபல டென்னில் வீரர் மகேஷ் பூபதி தனது மனைவி லாரா தத்தாவுடன் வாக்கினை பதிவு செய்தார்.