சென்னை: மகாகவி பாரதியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு  முதலமைச்சர் வாழ்த்து  தெரிவித்து உள்ளார். தமிழக அமைச்சர்கள் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதைசெய்தனர்.

மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்! தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்! மொழி – நாடு – பெண் விடுதலை – பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய! என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  மகாகவி பாரதியார் அவர்களின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு  அமைச்சர் பெருமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.