வலங்கைமான் மகாகாளி திருக்கோயில். வலங்கைமான். திருவாரூர்

தல சிறப்பு :
இக்கோயிலில் பாடைகட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது மிகவும் சிறப்பம்சமாகும். இது சோழர்களால் கட்டப்பட்ட கோயில்.
பொது தகவல் :
இந்த கோயிலில் பேச்சியம்மன், இருளன், மதுரைவீரன் விநாயகர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
தலபெருமை :
அம்மன் தோன்றிய விதம்: வலங்கைமான் அருகிலுள்ள ஐயனார் கோயில் வழியாக ஒரு பிராமண தம்பதியரால் ஒரு பெண்குழந்தை விட்டு செல்லப்பட்டது அந்த குழந்தையை அந்த பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் எடுத்து வளர்த்தனர். குழந்தைக்கு அம்மை கண்டு உயிர் பிரிந்தது அவர்கள் குழந்தையை தங்கள் விட்டு கொல்லைப்புறத்தில் கீற்றுக்கொட்டகை அமைத்து சமாதி வைத்தனர் .சமாதிக்கு தினமும் விளக்கேற்றிவந்தனர் வீட்டில் செய்யும் உணவுப்பண்டங்களை தினமும் படைத்தனர் காலப்போக்கில் சமாதியை அனைவரும் வழிபடத்துவங்கினர். வேண்டியவர்களுக்கு வேண்டிய பலன்கிடைத்ததால் அந்த குழந்தையை சீதளாதேவி என பெயரிட்டு அம்மனாக கருதி வழிபட்டனர். சீதளம் என்றால் குளிர்ச்சி என பொருள் அம்மை ஏற்பட்டு குளிர்ந்து போனதால் அந்த பெண் தெய்வம் சீதளாதேவி என அழைக்கப்படுகிறாள்.
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலுக்கு பங்குனி மாதத்தில் பாடைக்காவடி திருவிழா நடக்கும் மாரியம்மனுக்கு காப்பு கட்டி விழாவை துவக்குவார்கள் நோயுற்றவர்கள் தங்கள் நோய் நீங்கினால் பாடைக்காவடி எடுப்பதாக மகா மாரியம்மனை வேண்டுகின்றனர். நோய் நீங்கியதும், புனிதநீராடி, பாடை கட்டி படுத்துக் கொள்வர் அவரை இறுகக்கட்டி பிணம் போல தூக்கி வருவர் தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக இவரை கோயிலுக்கு தூக்கி வருவர் கோயில் வாசலுக்கு வந்ததும் அர்ச்சகர் அவர்கள் மீது புனித நீரை தெளிப்பார் அப்போது மயங்கிடந்தவர் உயிர்பெற்று எழுவது போல நடிப்பார். அவருக்கு விபூதியும், குங்குமமும் தரப்படும். இறக்க இருக்கம் தருணத்தில் அம்மாள் இவர்களை காப்பாற்றுவதாக ஐதீகம்.
தல வரலாறு :
தட்சனின் வேண்டுகோள்படி சக்திதேவி அவனது மகளாகப் பிறந்தாள். தட்சன் சிவபெருமானை வெறுத்தான். ஆனால் சக்தியோ சிவனையே திருமணம் செய்து கொண்டாள். தட்சன் யாகம் செய்த போது சக்தி யாகத்தீயில் விழுந்து மீண்டும் இமயமலையில் அவதரித்தாள். சக்திதேவியின் உருவம் நெருப்பில் குளித்ததால் சிதைந்து போயிற்று எனவே திருமால் உலகத்தை காப்பாற்ற சிவபெருமானை வேண்டி அழகிய சக்தியை உருவாக்க கேட்டார். அவ்வாறு உருவான சக்தி பல தலங்களில் அமர்ந்தாள். இவற்றை சக்திபீடங்கள் என்றனர். இந்த பீடங்கள் 108 தான். ஆனால் சக்திபீடங்களையும் மிஞ்சும் வகையில்சில கோயில்கள் அமைந்தன அவற்றில் ஒன்று தான் வலங்கை மான் மகா மாரியம்மன் கோயில்.
திருவிழா :
ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கும் மற்ற ஞாயிற்றுக்கிழமைகளிலும் இங்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது.
பிரார்த்தனை :
கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணத் தடை, பார்வை இழந்தவர்கள், அம்மை நோய் கண்டவர்கள் ஆகியோர் இங்கு வந்து குணம் பெறுகின்றனர்.
நேர்த்திக்கடன் :
இந்த கோயிலில் முக்கியமான வழிபாடு பாடைகாவடி ஆகும். தந்தையை பாடைமீது படுக்கவைத்து அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பது போல நடிக்க, மகன் பக்திப் பரவசத்தோடு தீச்சட்டி ஏந்தி வருவார். பிரார்த்தனை செய்பவரின் மனைவி கையில் வேப்பிலை ஏந்தி வருவார் இதே போல மகன் பாடையில் படுத்திருக்க தந்தையும் மற்ற உறவினார்களும் தீச்சட்டி ஏந்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.