சென்னை: புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள மூன்றாவது நாள் கூட்டத்தில் வினாக்கள் விடை நேரம் நடைபெற்றது. அப்போது எம்.எல்.ஏக்கள் கேட்கும் வினாக்களுக்கு அந்தந்த துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது மகளிர் உரிமை தொகை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு துணைமுதல்வர் உதயநிதி பதில் கூறினார்.
அப்போது, புதிதாக விண்ணப்பித்தவர்கள், கலைஞர் மகளிர் டிசம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தொரிவித்தார். மகளிர் உரிமை தொக்க்கு 28 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் அதனை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து தகுதி உள்ள மகளிருக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என கூறினார்.
தொடர்ந்து பேசியவர், மகளிர் உரிமைத்தொகையாக இதுவரை 30ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ளோம். ஒவ்வொரு மாதமும் 1.16 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியதுடன், ஒவ்வொரு மகளிருக்கும் தற்போது வரை ரூ.26ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இது இன்னும் அதிக அளவிர் மகளிர் பயனடைய வேண்டும் என்று கருதி நிபந்தனைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த திட்டத்தில் உள்ள நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுத்தியதால் புதியதாக பல மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி பெற்றுள்ளனர், மகளிர் உரிமைத் தொகை கோரி புதிதாக இதுவரை 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு டிசம்பர் 15 முதல் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார்.
Patrikai.com official YouTube Channel