சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில் மகளிர் உரிமை தொகையை ரூ.2000 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதியில்  அறிவிக்கப்பட  உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்றைய தினம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

தேர்தல் நடைபெறும் ஆண்டு என்பதால் முழு பட்ஜெட்டுக்கு பதில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசு அமைந்ததும் அந்த அரசு சார்பில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

இந்த நிலையில், 2026-27 ஆம் ஆண்​டுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதியமைச்​சர் தங்​கம் தென்​னரசு இன்று தாக்கல் செய்​கிறார். வரும் 20-ஆம் தேதி 2026-27ஆம் நிதி ஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்​யப்​படு​கின்​றன.

குறிப்பாக, தற்போது குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது. இந்தத் தொகை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என ஏற்கெனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கான அறிவிப்பும், பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்த அறிவிப்பும் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மகளிர் உரிமை தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்த அறிவிப்பும் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நேரமென்பதால் அரசு ஊழியர்களைக் கவரும் வகையில், தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்த குழுவின் அறிக்கை பற்றிய தகவல்கள் வெளியிடப்படலாம்.

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்த நிலையில், மாநில அரசே செயல்படுத்துவது குறித்தும், மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்துதல், புதிய மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை குறித்தும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சாலை மற்றும் மேம்பாலப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

‘உங்க கனவை சொல்லுங்க’ என்ற முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து புதிய சலுகைகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முழுமையாக விரிவாக்கம் செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]