போபால்:
ரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டதால் மத்திய பிரதேசத்தில் இரு நீதிபதிகள் பதவி இழந்தனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் நீதித்துறையில் பணியாற்றுவோர்கள் இரண்டுக்கு மேல் பிள்ளை பெற்றால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் சட்டம் அமலில் உள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் முதன் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இரு  நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.  குவாலியர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி மனோஜ்குமார், கபல்பூர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி அஷ்ரப் அலி ஆகியோர்தான் இந்த நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் சட்டத்தை மீறி மூன்றாவது  பிள்ளை பெற்றனர். இதையடுத்து போபால் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்தி இருவரையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த தகவலை ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் முகமத் பாகிம் அன்வர் வெளியிட்டுள்ளார்.

பதவி இழந்த இரு நீதிபதிகளும் கடந்த வருடம்தான் நீதிபதி பதவிக்கான  தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.