ரேவா:
த்திய பிரதேச மாநிலத்தில் குதிரைப்பேரம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக, அங்குள்ள ரேவா மாவட்டத்தில் அழகிய குளம் அமைப்பதற்காக, அந்த பகுதியில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை இடித்து, அங்கிருந்து மக்களை வெளியேற்றினர்.
பாஜகவின் குரூரமான செயலுக்கு இது மேலும் ஒரு சான்று என சமூக ஆர்வலகர்கள் விமர்சித்து உள்ளனர்.
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்று ரேவா மாவட்டம் (Rewa District)  இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் ரேவா ஆகும். இந்த மாவட்டம் ரேவா கோட்டத்தில் அமைந்துள்ளது. ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசத்தின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் உத்தரப் பிரதேச மாநில எல்லை ஓரம் அமைந்துள்ளது.
பிரபலமான இந்த நகரில் ஆர்.என்.திரிபதி என்ற பகுதியில்உள்ள குளக்கரை அருகே சேரி மக்கள் குடியிருந்து வருகின்றனர்.  அந்த குளத்தை நவீன குளமாக மாற்றியமைக்க  சவுகான் தலைமை யிலான மாநில பாஜக அரசு முடிவு செய்தது.  இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்களை உடனே காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், கொரோனா ஊரடங்கால் வேலையிழந்துள்ள அந்த குடிசைப் பகுதி மக்கள் எங்கு செல்வ தென்று தெரியாமல் விழிபிதுங்கிய நிலையில், அங்கேயே தொடர்ந்து வசித்து வந்தனர்.
இந்த நிலையில், மாநில அரசு அதிகாரிகள், பொக்லைன் இயந்திரங்களுடன் சென்று, அந்த பகுதி யில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட  மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளினர். இதனால், அந்தப்பகுதி மக்கள் வேறுவழியின்றி, தங்களது துணிமணிகளை எடுத்துக்கொண்டு சாலையில் நிராயுதபாணி யாக நின்று வருகின்றனர்.
மாநில பாஜக அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக விமசனத்தை ஏற்படுத்தி உள்ளது. மனசாட்சி இல்லாத வகையில் மாநில பாஜக அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.