பயணிகளின் கோரிக்கையை ஏற்று மதுரை-ராமேஸ்ரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கபடும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Must read

மதுரை:
யணிகளின் கோரிக்கையை ஏற்று மதுரை- ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் பயணிகள் ரயிலை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட ரயில்வேத்துறை, சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்க அனுமதி வழங்கியது.

தற்போது கொரோனா தொற்று குறைந்ததையடுத்து பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் இயக்கப்படும் இவ்விரு வழித்தட ரயில்கள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், உச்சிபுளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாசேத்தி, திருப்புவனம், சிலைமான், மதுரை கிழக்கு ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article