மதுரை: மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக தமிழக சிறைகளில் கைதிகள் சிலர், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதாக புகார்கள் வருவது உண்டு. அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவது வழக்கம்.


அதுபோன்று கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில், மதுரை மத்திய சிறையில் அதிரடி சோதனையில் போலீசார் இறங்கினர். சிறைத் துறையின் உதவி ஆணையர் வேணுகோபால் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என 120 பேர் கொண்ட படை சோதனையில் ஈடுபட்டது.


சிறை வளாகம், கழிவறைகள், கைதிகளின் அறைகள், சமையல் கூடம் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டனவா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை.
மதுரை சிறையில் மட்டும் விசாரணை கைதி, தண்டனை கைதி என 1000க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.