சென்னை: மதுக்கடைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வரும் சட்ட மாணவி நந்தினி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் மனு கொடுக்க சென்ற நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளதாக அவரது கணவர் கூறியுள்ளார்.

மதுக்கடைகளை மூட வேண்டுமென்று பல வருடங்களாக போராடி வருபவர் மதுரையைச் சேர்ந்த சட்டமாணவியும், போராளியுமான நந்தினி. இவர் பல்வேறு அரசியல் சமூகப் பிரச்னைகளுக்காகப் போராடி பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் சமயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஈ.வி.எம் மிஷினை வைத்து முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்றும், உடனே வாக்கு எண்ண வேண்டும் என்று கூறி தன் தந்தையுடன் வந்து மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார்.
இதையடுத்து தற்போது, டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து மனு அளிக்க தங்கை நிரஞ்சனாவுடன் சென்னை வந்த நந்தினி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சரிடம் மனு கொடுக்க அவர் வீட்டுக்கு சென்ற நந்தினியையும், அவரது தங்கை நிரஞ்சனாவையும் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்து தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்” என நந்தினியின் கணவர் குணா தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக செய்தியளார்களிடம் கூறிய குணா, தமிழக மக்களை நாசமாக்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் மூடவேண்டும் என வலியுறுத்தியுதுடன், உடல்நலனுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது ஐபிசி பிரிவு 328-ன் படி தண்டனைக்குரிய குற்றம். இக்குற்றத்தை தமிழக அரசே பல ஆண்டுகளாகச் செய்துவருகிறது. இதனால் லட்சக்கணக்கான தமிழக மகக்ளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மிக மோசமான பாலியல் குற்றங்கள் உட்பட ஏராளமான குற்றங்களுக்கு டாஸ்மாக் காரணமாக உள்ளது என்று கூறியவர், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தியே முதல்வரிடம் மனு கொடுக்க நந்தின் வந்ததாகவும், ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளுமே டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவோம் என தமிழக மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்தன. ஆனால், அதை செயல்படுத்த மறுக்கின்றன என குற்றம் சாட்டியவர்,
சென்னைக்கு வெள்ள அபாயத்தை உண்டாக்கும் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், கோவை மாவட்டத்தில் ஈஷா அமைப்பின் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நந்தினி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.