விழுப்புரம்
திடீர் நெஞ்சுவலி காரணமாக மதுரை எம் பி சு வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியின் மாலிந மாநாடு இன்று விழுப்புரத்தில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் கலந்துக் கொள்ள மதுரை எம் பி சு வெங்கடேசன் வந்துள்ளார்.
அவருக்கு திடீர் என நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையொட்டுத்து சு வெங்கடேசன் ம்பி அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவிழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் இருவரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சு.வெங்கடேசனை சந்தித்து நலம் விசாரித்தனர். அவர் இன்று மாலை வீடு திரும்புவார் எனத் தெரிய வந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel