Skip to content
  • Sat. Sep 26th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
ஆன்மிகம் தமிழ் நாடு

கோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்… வீடியோ…

May 4, 2020

மதுரை:

பாரம்பரியம் மிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்  விமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணம் ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்பானது.

வீடுகளில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண வைபோகத்தை கண்டு களித்ததுடன், தங்களது மங்கள நாணையும் மாற்றிக்கொண்டனர்.

மதுரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண பல்வேறுஉலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் மதுரையில் குவிவது வழக்கம்.  மதுரை மாநகரமே  விழாக்கோலம் பூண்டு காணப்படும்.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு காரணமாக, பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வந்த சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து, திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர்  திருக்கல்யாணம் மற்றும் நடைபெறும் என்றும், அதை பக்தர்கள் ஆன்லைனில் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி,    இன்று காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில்  4 சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி இந்த திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள்.

மேலும் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை உள்ள நிலையில் திருக்கல்யாண நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறை இணையதளம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் இணையதளம் www.maduraimeenakshi.org ஆகியவற்றிலும், கோவில் முகநூல் பக்கத்திலும் மற்றும் திருக்கோவில் யூ டியூப் அலைவரிசையிலும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. வீட்டில் இருந்தே பெண்கள் இறைவனை வேண்டி மங்கலநாண் மாற்றிக் கொண்டனர்.
Video Courtesy IBC Tamil

 

Post navigation

மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை உடனே மீளுங்கள்… ஸ்டாலின் வலியுறுத்தல்
நீலகிரியில் புதிதாக இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று… மக்கள் அதிர்ச்சி…

Related Post

தமிழ் நாடு

வீரமணி POCSO வழக்கு: “TRP-யைவிட வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் உள்ளன” வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

உலகம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

மெல்ல மெல்ல மங்கும் வாயேஜர்-1… உயிரைக் காக்க ஒரு அறிவியல் கருவி நிறுத்தம்…

September 26, 2026 Sundar
உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer