துரை

ல்ளி மாணவர்களுக்குப் போதைமருந்து விற்பனை செய்த மதுரை மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை காமராஜர் சாலையில் இயங்கி வரும் பிரபல மருந்தகமான ‘மதுரா மெடிக்கல் சென்டர்’ அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை கடிதங்கள் இல்லாமலேயே அல்பிரசோலம் (Alprazolam) எனப்படும் நரம்பியல் மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள் போதை உணர்வுக்கு அடிமையாவதாகவும் காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தெப்பக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமி தலைமையில் காவல் துறையினர் மற்றும் மருந்து ஆய்வாளர் குழுவினர் கடையில் அதிரடி சோதனை நடத்தி கடையில் இருந்த குறிப்பிட்ட மாத்திரைகளை பறிமுதல் செய்ததோடு, கடை உரிமையாளர் தங்கராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் தொடர்ந்து மருந்து விற்பனை செய்வதற்குத் தடை விதித்த காவல் துறையினர், கடையைச் சீல் வைக்கவும் உத்தரவிட்டனர்.

காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளை மருந்தாளுநர் பரிசோதனைக்கு உட்படுத்தினர்,  மேலும் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி கடைக்குச்சீல் வைப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.