மதுரை:

கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வராய்ச்சியின்போது கிடைத்த தொல்பொருட்களை ஆய்வு செய்ய ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன்  தெரிவித்து உள்ளார்.

கீழடியில் இதுவரை 5 கட்ட அகழ்வராய்ச்சிகள் முடிவடைந்துள்ளன. இதில் வியக்கத்தக்க வகையிலான தொல் பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், தமிழர்களின் நாகரிகம்  2600 ஆண்டுக ளுக்கு முந்தையது என்று தெரிவித்து உள்ளனர். இது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  கீழடியில் கிடைத்த தொல்பொ ருட்களை ஆய்வு செய்வதற்காக காமராசர் பல்கலைக்கழகமும், ஹார்வர்டு பல்கலைக்கழகமும் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள இருப்பதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்து உள்ளார்.

நாங்கள் ஆய்வு செய்ய முடியாத சில பொருட்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்படும். நாங்களும், ஹார்வர்டு பல்கலை.யும் இணை த்து தொல்லியல் துறைக்கு இறுதி அறிக்கை தருவோம். இதன் மூலம் கீழடியின் தொன்மைகளை மக்களுக்கு தெளிவுபடுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.