மதுரை,
தமிழகத்தில் நடைபெற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை ஏற்கனவே தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது, போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அவ்வாறு திரும்பாவிட்டால்… பணியில் இருந்த நீக்குவோம்ன்று என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கில், போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை மீறி போராட்டம் தொடர்ந்ததால், அரசு ஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளை கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், மோசஸ், தாஸ் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது நீதிபதிகள் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எந்தவித நிபந்ததனயுமின்றி உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டும் போராட்டத்தை தொடர்வது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஊழியர்களின் குறைகளை தீர்க்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, அரசு ஊழியர் சங்கங்கள் நீதி மன்றத்தை நாடாமல் போராட்டத்தில் குதித்து ஏன்? போராட்டத்தை முடித்துக்கொண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்.
நீதி மன்றம் ஏற்கனவே தடை விதித்தும், அதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மதிக்காது ஏன் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காலாண்டுத் தேர்வு நடக்கும் நேரத்தில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது மாணவர்களை பாதிக்காதா? என்று கேள்விகளையும் எழுப்பினர். போராட்டத்தை முடித்துக்கொண்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கூறினர்.
உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினால் வரும் திங்கட்கிழமை பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும். தலைமைச் செயலாளரை நேரில் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தத் தயார், தொடர்ந்து தீர்வு காணும் முடிவில் கோர்ட்டு ஈடுபடும் என உறுதி அளிப்பதாகவும் கூறி உள்ளனர்.
எனவே அரசு ஊழியர் சங்கங்கள் நிபந்ததனையின்றி ஸ்டிரைக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால், அதற்கு சங்க நிர்வாகிகள் சங்க அமைப்புகளிடம் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதாக கூறினர்.
இதன் மேலும் கோபமடைந்த நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒரு மணி நேரத்தில் பணியில் இருந்து நீக்க முடியும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து முடிவெடுத்து நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து வழக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.