மதுரை: உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பணியாற்றி வரும் நீதிபதிகள் உள்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இதையடுத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், நீதிமன்ற பணிகள் மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு மாறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. நீதிபதி, அவரது உறவினர், நீதிமன்ற ஊழியர்கள் 7 பேர் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து,  நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்  அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.